'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப்' - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும்' என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

thangamani, மொபைல் ஆப்

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர். 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் எம்எல்ஏ., அபுபக்கர், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், தனது கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பிடாரி பேரூராட்சியில் இயங்கிவந்த மின் கட்டண வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, மீண்டும் கீழ்பிடாரியிலேயே அந்த மையத்தை அமைக்க வேண்டும் எனக் கூறினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அந்த மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தவுடன், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் எளிதாகிவிடும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!