பணத்தை மிச்சம் பிடிக்க அசைவ உணவை நிறுத்தியது ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் உள்நாட்டில் சேவை வழங்கும் எகானமி கிளாஸ் விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளது. முன் அறிவிப்பு ஏதும் இன்றி திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளது. 

ஏர் இந்தியா

ஏர் இந்தியா அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமை, சரியான சேவை வழங்கப்படாதது, பிசினஸில் தோல்வி உள்ளிட்ட பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியாவை, டாடா குழுமம் வாங்குவதாகச் செய்திகளும் வெளியாகியிருந்தன

இந்த நிலையில் உள்நாட்டில் சேவை வழங்கும் விமானங்களில் அசைவு உணவு வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் பயணிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். அசைவ உணவு விரும்பிகள், விமான உணவுப் பட்டியலில் அசைவம் இல்லாதது கண்டு திகைத்துள்ளனர். பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது. 

ஏர் இந்தியா உள்நாட்டில் பயணிக்கு எகானமி கிளாஸ் விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்துவதன் மூலம் வருடத்துக்கு ரூ.7-8 கோடி மிச்சம் செய்ய உள்ளதாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!