Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.ஜி.பி-க்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் தாக்கல்!

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழக டி.ஜி.பி-க்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பதவி நீட்டித்து கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. குட்கா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லஞ்ச விற்பனையை அனுமதித்ததாக வருமானவரித் துறையினர் அளித்த தகவலின் பேரில், டி.ஜி.பி ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுடைய நபர் ஒருவரை டி.ஜி.பி-யாகப் பணி புரிவதற்கான காலத்தை நீட்டித்தால் அது தவறான உதாரணமாகிவிடும். எனவே, குட்கா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லஞ்ச விற்பனையை அனுமதித்தது தொடர்பாக டி.ஜி.பி ராஜேந்திரன் மீதான விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியும், சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், ராஜேந்திரனை டி.ஜி.பி-யாகப் பணியாற்ற பணி நீட்டிப்பு செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த ஆவணங்களை தலைமைச் செயலாளரும், லஞ்சம் வாங்கியது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக வருமான வரித்துறை தலைமை ஆணையரும், வருமானத்துறையின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திவரும் விசாரணை தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும் நீதிமன்றத்தில் மூடி சீல் இடப்பட்ட கவரில் இன்று தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தரப்பில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், புகாரை அனுப்பியதே வருமான வரித்துறைதான் எனும்போது அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஏன் தாமதம் எனக் கேள்வி எழுப்பினர்.  பின்னர், அது தொடர்பான ஆவணங்களை ஜூலை 12-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வருமான வரித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்த பின்பு தனக்கும் மனுதாரருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். அப்போது அதை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement