Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வக்பு வாரியத்துக்கு அடுத்தத் தலைவர் யார்?  வரிந்து கட்டும் இஸ்லாமிய அ.தி.மு.க.வினர் 

தமிழ்நாடு வக்பு வாரியம்

 தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் பதவியைப் பெற அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் மூலம் இந்தப் பதவியைப் பெற காய் நகர்த்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தலைவராக இருந்தவர் தமிழ்மகன்உசேன். இவருக்குக் கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், வக்பு வாரியப் பதவியை ராஜினாமா செய்தார். இந்தச் சமயத்தில் ம.தி.மு.க. நிர்வாகியைச் சந்தித்த விவகாரத்தில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு வக்பு வாரியத்துக்குப் புதிய தலைவர்கள் யாரும் நியமிக்கப்படாமலேயே ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. தலைவர் பதவி இல்லாமல் வக்பு வாரியத்தில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதோடு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. பெயரளவுக்கே வக்பு வாரியம் செயல்பட்டு வந்தது. தற்போது, புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளது. இந்தப் பதவியைப் பெற அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

 குறிப்பாக முன்னாள் தலைவர் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா எம்பி, திண்டுக்கல் ஷாஜகான், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், நாகூர் நஜிமுதின் ஆகியோர் ரேஸில் உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரின் ஆசியைப் பெற போட்டியாளர்கள் முயன்றுவருகின்றனர். ஏற்கெனவே அ.தி.மு.க.வில் அணிகள் உருவாகி கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. இதனால் தலைவர் பதவியை பெற விரும்புபவர்களும் அணிகளைச் சார்ந்தே செயல்படுகின்றனர். சமீபத்தில் பெங்களூருச் சிறைக்குச் சென்ற தமிழ்மகன் உசேன், சசிகலாவிடம், வக்பு வாரியத் தலைவர் பதவியைக் கேட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நெருக்கத்திலிருக்கும் அன்வர்ராஜா, வக்பு வாரியத் தலைவர் பதவியைப் பெற காயை நகர்த்திவருவதாகச் சொல்லப்படுகிறது. இது தவிர முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீம், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர் மூலம் முதல்வரிடம் பேசிவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அமைச்சர் நிலோபர் கபில், தன்னுடைய ஆதரவாளர்களில் யாருக்காவது இந்தப்பதவியைக் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரிய 

 ஜெயலலிதாவால் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்ற திண்டுக்கல் ஷாஜகான் போட்டிக் களத்தில் உள்ளார். மேல்மட்டத்தில் செல்வாக்குள்ள நாகூர் நஜிமுதினும் தலைவர் பதவியைப் பெற பல்வேறு வகையில் முயன்றுவருகின்றார். இந்தச் சூழ்நிலையில் தமிழ்மகன் உசேனுக்குத் தலைவர் பதவி கொடுக்கக்கூடாது என்று சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், வக்பு வாரியத் தலைவர் பதவி நிச்சயம் அ.தி.மு.க.வில் களேபரத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். இதன்காரணமாக வக்பு வாரியத் தலைவர் பதவியை நிரப்ப காலஅவகாசம் ஏற்படலாம் என்றும் சொல்கின்றனர். அ.தி.மு.க.வினர். 


 ஏற்கெனவே ஓர் ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவர் பதவி காலியாக இருந்ததால் வக்பு வாரிய பணிகள் முடங்கியுள்ளன. புதிய தலைவர் நியமிப்பதிலும் காலதாமதமாகினால் வக்பு வாரியமே முடங்கிவிடும் சூழ்நிலை ஏற்படும் என்கின்றனர் வக்பு வாரிய வட்டாரங்கள். 
 இதுகுறித்து வக்பு வாரிய வட்டாரங்கள் கூறுகையில், "இந்திய ரயில்வேக்குப்பிறகு அதிகமான சொத்துகள் வக்பு வாரியத்தில் மட்டுமே உள்ளன. இந்தச் சொத்துகளைப் பராமரித்துவரும் வக்பு வாரியத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெரும் சவாலாக இருக்கின்றனர். ஏராளமான வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. அவை மீட்டெடுக்க வக்பு வாரியம் பல்வேறு வகையில் முயன்றுவருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. மேலும், வாடகை நிர்ணயிப்பது, வசூலிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. தலைவர் பதவி காலியாக இருப்பதால் இந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வக்பு வாரிய செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரியால் ஓரளவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்றாலும் தலைவர், உறுப்பினர்களால் மட்டுமே வக்பு வாரியம் முழுமையாகச் செயல்பட முடியும்" என்றனர்.  

சிக்கந்தர்இதுகுறித்து உறுப்பினர் சிக்கந்தர் கூறுகையில், "தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்று அரசுக்குக் கடிதம் எழுதினோம். ஆனால், பதவி நிரப்பப்படாமல் வக்பு வாரியத்தின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பள்ளிவாசல் சொத்துகள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன. தர்கா, பாடசாலைகளுக்குச் சொந்தமான சொத்துகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல ஜவுளி மற்றும் ஜூவல்லரி நிறுவனம், வக்பு சொத்தை ஆக்கிரமித்திருந்ததை மீட்டுள்ளோம். வக்பு சொத்தை விற்கவும், வாங்கவும் முடியாத நிலை உள்ளது. வக்பு வாரிய சொத்தை வாங்குபவர்களுக்குச் சிக்கல் என்பதால் அதை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தலா இரண்டு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ். அதிகாரி ஒருவர், அரசு நியமிக்கும் உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் வக்பு வாரியத்தில் இடம்பெறுவர். அவர்களைத் தேர்ந்தெடுத்தப்பிறகு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த முறை தி.மு.க.வினருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வாடகை வசூலிப்பதில் உள்ள பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டுவருகிறது. வக்பு வாரியத்துக்குத் தீர்ப்பாயம் அமைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான உறுப்பினர்கள் நியமிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை" என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close