ட்விட்டர் விதியை மீறிய சச்சின்... அலர்ட் செய்த நெட்டிசன்ஸ்!

முன்னணி சோஷியல் மீடியாக்களில் ஒன்றான ட்விட்டரில், தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவரை சுமார் 1.7 கோடி பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

தான் நடித்த, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை, சச்சின் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர் "உங்கள் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் நிறைய சாக்குப் போக்கு சொல்கிறார்களா? #NoExcuses என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் வசிக்கும் நகரம் மற்றும் மொபைல் எண்ணோடு டேக் செய்யுங்கள். நான் அவர்களோடு பேசலாம் என்றிருக்கிறேன்" என எழுதியிருந்தார். தங்களது நண்பர்களின் மொபைல் எண்களை, சச்சின் ட்வீட்டிற்கு ரிப்ளையாகப் பலரும் காலையிலிருந்து பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், சச்சினின் ட்வீட்டானது பிரைவசியைப் பாதிக்கும் என நெட்டிசன்ஸ் பலரும் எச்சரித்துவருகின்றனர். ட்விட்டரின் விதிமுறைப்படி மொபைல் எண் உள்ளிட்ட அடுத்தவர்களது அந்தரங்கத் தகவல்களை, அவர்களின் அனுமதியின்றிப் பகிரக்கூடாது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் ட்ராய் ஹன்ட் இதுகுறித்து, "மொபைல் எண் பகிரப்படும்போது, ஸ்பேம் செய்யப்படவோ, அறிமுகமில்லாத நபர் மூலம் தொந்தரவு ஏற்படவோ வாய்ப்பிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி மொபைல் எண்களை சோஷியல் மீடியாவில் பகிரக்கூடாது. பிறரின் மொபைல் எண்களைப் பதியச்சொல்லும் சச்சினின் ட்வீட்டானது, ட்விட்டரின் விதிமுறையை மீறுவதாகும்" எனத்தெரிவித்துள்ளார். எனினும், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ட்வீட்டை இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!