விரைவில் வீடு தேடி வருகிறது ஐஐடி-யில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகள்! 

பொறியியல் படிப்பில் முன்னணி கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன ஐ.ஐ.டி.-க்கள். இதில் சேர இந்திய அளவில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஐ.ஐ.டி-யில் சேருவதற்காக எட்டாம் வகுப்பில் இருந்தே பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வத்தோடு உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் 'ஸ்வயம் பிரபா' என்ற திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின்கீழ் 32 டி.டி.எச் சேனல்களில் வீடு தேடி பயிற்சி வழங்கப்படும். 

ஐஐடி.

ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரத்துக்குப் பயிற்சி வகுப்புக்கான நிகழ்ச்சி இருக்கும். தினமும் ஆறு முறை மறுஒளிபரப்பு செய்யப்படும். மாணவர்கள் அவர்களுக்கு உகந்த நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், சமூகம், விவசாயம், வணிகம் மற்றும் கலை சார்ந்த கல்விப் பாடங்களும் இடம் பெறும் என்கிறார்கள். 

'ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களின் பாடத்திட்டத்தில் இருந்தும், அவர்களைப் போட்டித்தேர்வுக்குத் தயார் செய்யும் வகையிலும் பயிற்சிக்கான பாடங்கள் வடிவமைத்து வருகிறோம். இந்தப் பாடங்கள் ஐ.ஐ.டி-தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் ஐ.ஐ.டியில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.டி.எச் மூலம் வீடு தேடி வரும் ஐ.ஐ.டி தேர்வுக்கான பயிற்சியின் மூலம் இனிவரும் காலங்களில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் தேவையில்லாமல் அதிகளவில் பணம் செலுத்திப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!