Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கொடநாடு மர்மம் விசாரிக்கப்பட வேண்டும்': சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்!

கொடநாடு மர்மம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கோரிக்கை வைத்துள்ளார்.

Pon Radhakrishnan

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “ ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில்  நடக்கும் சம்பவங்கள் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. ஆகையால், அதுகுறித்து தமிழக அரசு சிறப்பு விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க  வேண்டும்.  தமிழகத்தில் இந்து மதத்தலைவர்கள் தாக்கப்படுவதால் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக  நான் கூறினேனே ஒழிய, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைச் சொல்லி பி.ஜே.பி-யினர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. என் ஊரில் கூட என் பெயரைச் சொல்லி சிலர் பணம் வசூலித்திருக்கிறார்கள். உண்மையான தொண்டன் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட மாட்டான்.  இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது அடக்குமுறை சட்டம் கொண்டுவந்திருப்பது. அந்நாட்டு  அரசியலுக்காக. அது மீனவர்களைப் பாதிக்காது.  இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகின்றன. இந்தியாவை எதிர்க்கும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close