Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சுவாதி கொலை வழக்கு” பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கைது நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை

சுவாதி

சுவாதி கொலை வழக்கு’’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கைது நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் பலர் முன்னிலையில் சுவாதி கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையை மையமாகக் கொண்டு இயக்குநர் ரமேஷ் செல்வன் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். அதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்புக்குள்ளானது. அப்படத்தைத் திரையிடக் கூடாது என வலியுறுத்தி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், நேற்று போலீஸ் உயரதிகாரியைச் சந்தித்து சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு, கைது நடவடிக்கை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றனர். மனுக்களை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணை வரும் வரை கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close