வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (11/07/2017)

கடைசி தொடர்பு:12:23 (11/07/2017)

நடிகை சமந்தாவின் ட்விட்டர் ஃபாலோயர்களுக்கு ஒரு செய்தி!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கலக்கும் நடிகை சமந்தாவை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது. இந்நிலையில், தனது 40 லட்சம் ஃபாலோயர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்துள்ளார். 

சமந்தா

"நீங்கள் இல்லாமல் நான் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆரம்பத்திலிருந்து எனக்குத் தூண்டுகோலாக இருந்த ரசிகர்களுக்கு, எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் என் மிகையான அன்பும் அரவணைப்பும் முத்தங்களும்" என நடிகை சமந்தா ட்வீட் செய்திருக்கிறார். இதோடு #4MillionLoveForSamantha எனும் ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளார். 

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் வரும் அக்டோபரில் திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க