நமீதா, காயத்ரி சொல்வது தவறு! - 'பிக் பாஸ்' பரணியைப் பற்றிப் பகிரும் நடிகர்!

amit

விஜய் டிவி-யின் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் லீட் ரோலில் நடித்தவர், அமித் பார்கவ். இவர், சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர், கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'பிக் பாஸ்' தமிழில், பரணியைப் பற்றி சக ஹவுஸ்மேட்ஸ் பேசியதைக் கண்டித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு லைவ் வீடியோவைப் பதிவுசெய்திருக்கிறார் அமித் பார்கவ். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 

"2016-ல 'அச்சம் தவிர்' நிகழ்ச்சியில் நானும் பரணியும் ஒண்ணா கலந்துக்கிட்டோம். அவரோடு ஒன்றிரண்டு வாரங்கள் நல்லா பழகியிருப்பதால், அவரைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். நேற்று ஒளிபரப்பான 'Bigg Boss' நிகழ்ச்சியில், 'பரணி இருக்குற வீட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது'னு காயத்ரி சொன்னாங்க. அது ரொம்பத் தவறானது. அவங்க அப்படிச் சொன்னது என்னை ரொம்பப் பாதிச்சது. பரணி, இதுவரை யாரைப் பற்றியும் தப்பாப் பேசுனதில்லை. எதை வெச்சு இப்படி அவங்க பேசினாங்கன்னு தெரியலை. அவருக்கும் மனைவி, பிள்ளைகள் இருக்காங்க. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறவங்க அவரைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னும், பொது இடங்களில் அவரைப் பார்க்கிறவங்களோட எண்ணத்தையும் என்னால உணரமுடியும். அவருக்கு சப்போர்ட்டா நான் பேச வரலை. ஒரு சக மனுஷனா அவர் மேல ஏற்பட்ட கறையை நீக்கவேண்டியது என் கடமை. 

video

'பெண்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பேத்துக்கிறேன்'னு அங்க சிலர் சொல்றாங்க. சிலர், அவர் பைத்தியமாகிட்டார்னு சொல்றாங்க. ஒரு வீட்டில், ஒரு மனுஷனை எல்லோரும் ஒதுக்குனா அவங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுறது சாதாரணமானது. பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் நல்லவர். அவர் ஒரு மதிப்புமிக்க மனிதர். டிவி-யில் இந்த ஷோவை கோடிக்கணக்கான பேர் பார்க்குறாங்க. இப்படியொரு ஷோவுல அவரைப் பற்றித் தப்பா பேசுறது நாகரிகமான செயல் கிடையாது. இது அவரோட நற்பெயரைக் கெடுக்குற மாதிரி இருக்கு. இதை உலகமே பார்க்குதுங்கிறதை அங்கே இருக்கிறவங்க புரிஞ்சுக்கணும். பரணி ஓர் அப்பாவி" என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். 

பரணி, பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குதித்ததால், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!