Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' அரசின் அறிவிப்பு சரிதான்...ஆனால்?!'  - தகிக்கும் திருநங்கைகள் 

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை ஒன்று, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ' எங்கள் பாலினத்தை வெளிப்படுத்துவதில் தமிழக அரசுக்கு என்ன குழப்பம்? அரசின் புதிய அரசாணையால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை' என்கின்றனர் திருநங்கைகள். 

grace banu
 

’அரசு ஊழியர்  மற்றும் ஓய்வூதியர்களுக்குத் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு’ என நேற்று அரசாணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி(GO Ms No:.180 Finance ), 'பெண் குழந்தைகளுக்கு வழங்கும் சலுகைகள் திருநங்கைகளுக்கும் வழங்கப்படும். அக்குழந்தைகள் 25 வயதுவரை  குடும்ப ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், " இந்த அரசாணையால் எங்களுக்கு எந்தவிதப் பலனும் இல்லை" என்கிறார் பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானு. 

அவர் நம்மிடம், " அரசு ஊழியர்களின் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண் குழந்தைகளாகக் கருதப்படுவர் என அறிவித்து, அவர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுண்டு' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க அறிவிப்புதான். இதுபோன்ற முயற்சியை முன்னெடுத்த தமிழக அரசுக்கும் நிதித்துறைக்கும் திருநங்கையர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய பாலினத்தை வெளிப்படுத்த எங்களுக்கு உரிமையிருக்கும் போது எங்களை எப்படி பெண் குழந்தைகளாகக் கருத்தில் கொள்ள முடியும்? எங்கள் பாலினத்தை குறிப்பிடுவதற்கு எது அரசைத் தடுக்கிறது? நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் மசோதாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரையில், அனைத்து அமைப்புகளும் எங்கள் பாலினத்தை வரையறுக்கும்போது, தமிழக அரசு ஏன் குழப்பத்தைக் கடைபிடிக்க வேண்டும்? இந்தக் குழப்பத்துக்கான விடையை நாங்கள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறோம். எங்கள் பாலினத்தை வெளிப்படையாகவே சொல்லுங்கள். எங்களுக்கான உரிமைகளை அரசியலமைப்பின் அடிப்படையில் ஒன்றாக ஆக்குங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். அதன்பிறகு வெளியாகும் இது போன்று அரசாணைகள் வெளியானால், அது மட்டுமே திருநங்கைகளின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்" என்றார் ஆதங்கத்துடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close