Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக மக்கள்தொகை தின விழிப்புஉணர்வுப் பேரணி!

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, நெல்லையில் இன்று விழிப்புஉணர்வுப் பேரணி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஜூலை 11-ம் தேதி,  உலக மக்கள் தொகை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவதுகுறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, உணவு, கல்வி, போக்குவரத்து, பொருளாதார நெருக்கடி, இடப் பற்றாக்குறை போன்ற பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 

அதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதுகுறித்த விழிப்புஉணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் செயல்கள், இந்த தினத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகை, உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வரும் 2020-ம் ஆண்டு,  சீனாவை மிஞ்சி முதலிடத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, உலக மக்கள்தொகை தின விழிப்புஉணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை விளக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி, பள்ளி மாணவர்கள் 500 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை லூர்துநாதர் சிலை முன்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்தப் பேரணியைத் தொடங்கிவைத்தார். அருங்காட்சியகம் அருகில் பேரணி நிறைவடைந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ’’மக்கள்தொகைப் பெருக்கத்தால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.  எனவே, குடும்பங்களில் அளவான குழந்தைகளுடன் வாழ்வதே நல்லது. குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்களிடம் சிறப்புக் கவனம் செலுத்தவும் இயலும். அதனால், நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் விழிப்புஉணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close