Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகமே கொள்ளை பூமியாக மாறும்! அரியலூர் மாவட்டத்தை அதிரவைக்கும் வடமாநில கொள்ளையர்கள்

வட மாநிலத்தவர்களால் அரியலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை அதிகரித்ததோடு, அவர்களை மாவட்டத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அரியலூர் சின்னக் கடைத் தெருவில் சுந்தர் என்பவர் சுந்தரா என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 27-ம் தேதி இவரது கடையில் புகுந்த கொள்ளையர்கள்  90 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 35 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் சி.சி.டி.வி கேமராவில் உள்ள பதிவை வைத்தும், செல்போனில் பேசியதை வைத்தும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்தஆகிய இருவரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து 65 கிலோ வெள்ளி பொருள்களும், 65 கிராம் தங்கமும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாணையில், சில நாள்களாக நகைக்கடையை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மே 27-ம் தேதி அதிகாலையில் கொள்ளையடித்துவிட்டு பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் அரியலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு  நீதிபதி மகாலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, அரியலூரர் மாவட்டத்திலிருந்து வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் குமாரிடம் பேசியபோது, "வடமாநிலத்தவர்களால் அரியலூர் மாவட்டமே சீரழிந்துகொண்டிருக்கிறது. ராம்கோ, டால்மியா, சங்கர் சிமென்ட் ஆகிய தனியார் சிமென்ட் ஆலைகள் குறைந்த சம்பளத்துக்காக அதிக அளவிலான வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இதுவே முதல் தவறு. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைகொடுக்காமல் வெளிமாநிலத்தவர்களுக்கு எப்படி வேலைகொடுக்கலாம். ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்கியிருந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேலை பார்ப்பதைத் தவறாகச் சொல்லவில்லை. இவர்கள் குடித்துவிட்டு கொலை, கொள்ளை என்று பல குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுக்க எதுவும் தனிச்சட்டம் உண்டா.

ஆறு மாதத்துக்கு முன்பு ஒட்டகோவில் கிராமத்தில் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் தவறுதலாக நடக்க முயன்றுள்ளார். அவனை அந்தக் கிராம மக்களே பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் மூன்று வருடத்துக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதால் அந்தக் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டது. இது வெளியில் தெரியாமல் இருக்க அந்தக் குழந்தையைச் சாக்கு மூட்டையில் கட்டி அறையில் போட்டுவிட்டு சினிமாவுக்குச் சென்றுவிட்டார். குழந்தையைக் காணோம் என்று பெற்றோர்கள் தேடி அலைந்துகொண்டிருந்தபோது அவரது ரூம்மில் மூட்டையோடு மூட்டையாக இருந்தது. அந்தக் குற்றத்தைச் செய்தவரை கைது செய்தது காவல்துறை.

தமிழக காவல்துறையிடம் நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், இம்மாவட்டத்தில் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கு காவல்துறையிடம் உள்ளதா? குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் தள்ளுகிறது. அவர்கள் ஜாமீன் பெற்று வெளியே வந்ததும் அவர்கள் மாநிலத்துக்கு சென்று விடுகிறார்கள். அந்த வழக்கு அப்படியே நிலுவையில் உள்ளது. இவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என்று காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கிறதா? காவல்துறையின் தொடர் நடவடிக்கை இல்லாததால் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவரைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தால் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் தடுக்கப்படும். இல்லையேல், தமிழகமே கொள்ளை பூமியாக மாறும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement