வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (11/07/2017)

கடைசி தொடர்பு:17:43 (11/07/2017)

மெழுகு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி வரி பாதிப்பினால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்

இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் இயங்கி வருகின்றன. ஜி.எஸ்.டி வரிமுறை கொண்டு வருவதற்கு முன்னால் மூன்று விதமான வரி அமலில் இருந்தது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி வரிமுறைக்குப் பின் அது இரண்டு விதமான வரி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி முழுவதுமாகக் குறைந்து, அந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தத் தொழிற்சாலைகளுக்கு ஜி.எஸ்.டி வரிமுறைகளை அரசாங்கம் மீண்டும் மறுபரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அதுவரை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மெழுகு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்காது என தர்மபுரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.