‘குடும்பக் கட்டுப்பாடு செய்பவர்களுக்கு ‘4ஜி ஸ்மார்ட் போன்’- ராஜஸ்தான் அரசு அதிரடி பிளான்

குடும்பக்கட்டுப்பாடு

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு ‘4ஜி ஸ்மார்ட் போன்’ அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் மாநில நிர்வாகம் சார்பாக திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் இலக்கை அடைய போட்டிப் போட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள ஜலாவார் மாவட்டம் குடும்பக் கட்டுப்பாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னணியில் இருக்கிறது. தற்போது குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ‘4ஜி ஸ்மார்ட் போன்’ மற்றும் சேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் ஆர்வமாகக் குடும்பக் கட்டுப்பாடு செய்து வருகின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின் இம்மாவட்டத்தில் அதிகளவில் இதுவரை 8 ஆயிரத்து 410 பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 102 சதவீதம் அதிகமாகும். இதில் 270 ஆண்கள் வாசெக்டமி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!