Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சல்மான் கானை ஃபாலோ செய்யவில்லை... என் வழி தனி வழி' - என்ன சொல்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்?

ஜூனியர் என்.டி.ஆர்

தெலுங்கு ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ரொம்பவே பிஸி. தமிழில் பிக் பாஸுக்கு எப்படி ஒரு மாத காலமாக புரொமோ செய்தார்களோ அதேபோலத்தான் தெலுங்கிலும் கடந்த பல நாள்களாக புரொமோஷன் செய்துகொண்டிருக்கிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர் காலையில் தூங்கி எழுந்ததும் பெட் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவருக்கு முன்னால் அத்தனை கேமராக்கள் இருக்கும். அதைப் பார்த்ததும் பதறும் அவர். 'பிக் பாஸ் ஹவுஸ்ல கேமராவ வையுங்க... என் வீட்ல இல்ல' என்பதுபோல புரொமோ வீடியோ இருக்கும். 

இந்த மாதம் பதினாறாம் தேதி 'ஸ்டார் மா' தொலைக்காட்சியில் தெலுங்கு 'பிக் பாஸ்' முதல் சீஸன் ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழில், பதினான்கு பிரபலங்கள், தொன்னூறு நாள்கள் தங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில், பன்னிரண்டு பிரபலங்களை வைத்து எழுபது நாள்கள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் மீட் நடந்தது. அதில் பலரும் ஜூனியர் என்.டி.ஆரிடம் சில கேள்விகளை முன் வைத்தனர். 

அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துப் பேசிய ஜூனிய என்.டி.ஆர், தான் இதுவரை சல்மான் கான் தொகுப்பாளராக இருந்த பத்து எபிசோடுகளில் ஒன்றிரண்டு எபிசோடுகளைத்தான் பார்த்திருப்பதாகவும் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை அப்படியே நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை எனவும், எனக்கென தனி அடையாளத்தை இந்த நிகழ்ச்சியில் கொண்டு வருவேன் எனவும் கூறியுள்ளார். அதேபோல, இந்த நிகழ்ச்சி தெலுங்கு மக்கள் மனதில் சென்சிபிளான விஷயங்களைப் பதிய வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதாவது, என் வழி தனி வழி என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close