Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாலு மகனுக்கு நிதிஷ் குமார் அறிவுரை: பீகார் அரசியல் பரபரப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பீகார் மாநில அரசியலில் சி.பி.ஐ கொளுத்திப் போட்ட வெடி தொடர்ந்து நிற்காமல் வெடித்துக் கொண்டிருக்கிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் என்று மூன்று கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். இந்த நிலையில் தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. ஊழல் அற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் நிதிஷ் குமார் இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் என்று பி.ஜே.பி கேள்வி கேட்க ஆரம்பித்தது. ஒரு வேளை பீகார் ஆட்சிக்குப் பிரச்னை ஏற்பட்டால், வெளியில் இருந்தும் ஆதரவு அளிப்போம் என்றும் பீகார் மாநில பி.ஜே.பி தலைவர்கள் கூறினர்.
இந்நிலையில், பீகாரின் அரசியல் நிலவரம் குறித்து தமது கட்சி எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் நிதிஷ்குமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "என்னுடைய கொள்கையில் எப்போதுமே சமரசத்துக்கு இடம் இல்லை. ஊழலுக்கு எதிரான நிலை என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஊழலை பொறுத்துக்கொள்ள முடியாது. சி.பி.ஐ என்னுடைய வீட்டில் சோதனை நடத்தவில்லை. இது குறித்து அவர்கள் கொடுத்த பதில்கள், விளக்கங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. (லாலு அல்லது அவரது மகன் தேஜஸ்வி பெயரைக் குறிப்பிடாமல்) ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவர்கள், அதுகுறித்து மக்களிடம் உண்மையை விளக்க வேண்டும். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஏதாவது ஊழல் குற்றசாட்டுகள் கூறப்பட்டால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement