Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்கியது

காவிரி வழக்கு

முடிவற்ற கதை போல தொடர்ந்துகொண்டிருந்த காவிரி வழக்கின் இறுதி விசாரணை ஒரு வழியாகத் தொடங்கி விட்டது.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.


நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு 11-ம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, கர்நாடகா அரசு சார்பாக ஆஜராகும் ஃபாலி எஸ். நரிமன் ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியதற்கு மாறாக கேரள அரசு கூடுதலாக தண்ணீரை பயன்படுத்துவதாக தமிழக அரசு ஏற்கெனவே குற்றம் சாட்டி இருக்கிறது. பவானி ஆற்றின் குறுக்கே, பாசனத் திட்டத்துக்காக கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டி உள்ளது. இதனால், தமிழகத்தின் மேற்பகுதியில் தண்ணீர் ஓட்டத்தை பாதிக்கும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பாசனத்துக்கான தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என்றும் தமிழக அரசு முறையிட்டது.


இதனை மறுத்துள்ள கேரள அரசு, பாசனத்திட்டத்துக்காக, காவிரி நீரைப் பயன்படுத்துவதற்காக தடுப்பணை கட்டவில்லை என்று கூறியது. உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியிருப்பதை அடுத்து தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close