Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு  எதிராக எழும் கண்டனங்கள்!

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது. "தமிழகத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க-வினர் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் இது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி  இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் இல்லை என்றால் தமிழகம் கலவர பூமியாக மாற வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. பல்வேறு கட்சியினர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனங்களை தொடர்ந்து  பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமார் பேசும்போது, "தனிப்பட்ட சொத்து விவகாரம், குழும பிரச்னைகள், குடும்ப விஷயங்களில் பா.ஜ.க-வினர்களோ, இந்து அமைப்பினர்களோ தாக்கப்பட்டால் அதனை பொதுமக்கள் மீது திணித்து சட்டம்- ஒழுங்கு கெடும் வகையில்  மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பொறுப்பற்ற செயல். இந்த பேச்சு கண்டனத்துக்குரியது. இந்தியாவில் பா.ஜ.க-வினரும், இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பல சமூக பிரச்னைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல பிரச்னைகளை தமிழகத்திலும் உருவாக்க இவர்கள் திட்டம் போடுகிறார்களோ? என்ற சந்தேகம் வருகிறது. இந்து மக்கள் கட்சி அலுவலகம் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் அதற்கு  சொன்ன காரணம் ,அவர்கள்  குடித்துவிட்டு பிரச்னைகள் செய்கிறார்கள் என்று. இப்படித்தான் இந்து அமைப்புகளின் நிலை இருக்கிறது"  என்றார்.

"இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால், தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று மத்திய அமைச்சர் பொன்னார் கூறியது தவறு. எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக கருத்து கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும்" என குமரிமாவட்ட காங்கிரஸ் போர்க்கொடி பிடித்துள்ளது.

"தமிழகம் கலவர பூமியாக மாறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் அது குறித்து எந்த ஒரு உண்மையும் வெளி வருவதற்கு முன்னதாக இது முஸ்லிம்களால் செய்யப்பட்டது போன்றும், முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசுவது சரியல்ல. அனைத்து மக்களுக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சர் இப்படி பேசுவது, அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும்போது எல்லாம் முஸ்லிம்களால் செய்யப்பட்டது போல்  பதவிகளில் உள்ளவர்கள் சர்வ சாதரணமாக கூறிவிடுகின்றனர். இது போன்ற உணர்வுகளை தூண்டும் பேச்சுக்களால், பல வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் பல பகுதிகளில் நடந்திருக்கிறது.

பொன் ராதாகிருஷ்ணின் மீது  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குமரிமாவட்ட எஸ்.பி.யிடம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement