Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் பக்கத்தை டி- ஆக்டிவேட் செய்த காவ்யா மாதவன்

கேரள நடிகை கடத்தல் வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டதையடுத்து, அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

காவியா மாதவன்

திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் ஃபேஸ்புக் பக்கத்தில், சிலர் மோசமான கமென்ட்டுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், ஃபேஸ்புக் பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்திருக்கிறார், காவ்யா மாதவன். திலீப் உடன் காவ்யா மாதவனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காவ்யா மாதவன் ஏற்கெனவே, நிஷால் சந்திரா என்பவரை திருமணம்செய்து, பின்னர் அவரிடமிருந்து விவகாரத்து பெற்றுள்ளார்.

இன்னொரு புறம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திலீப்புக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டுவருகிறார்கள். திலீப் நடித்து வெளியான 'வெல்கம் சென்ட்ரல் ஜெயில்' என்ற திரைப்படத்தின் மீம்ஸ்களைப் போட்டும் திலீப்பை கலாய்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட திலீப், அலுவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கு வெளியே கூடியிருந்த மக்கள், திலீப்புக்கு எதிராக கோஷம் போட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close