Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீர் பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Kashmir attack

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள்  ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. நேற்று மாலை, காஷ்மீரின் புத்காம் மாவட்டதில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப்  படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

அப்போது, தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அதில், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. 

நேற்று முன்தினம், அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தாக்குதல் சம்பவத்தில்  ஏழு பக்தர்கள் கொல்லப்பட்டனர்.  தாக்குதலுக்குப் பிறகு, அமர்நாத் யாத்திரைக்கு இரண்டாம்கட்டமாகச் சென்ற பக்தர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement