Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரோம் சர்மிளாவுக்கு இன்று திருமணம்? பரபரப்பில் கொடைக்கானல்!

மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா, தற்போது கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். தனது இளமைக்காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்த இரோம் சர்மிளா, தேர்தல் கொடுத்த தோல்வியால் மணிப்பூரை விட்டு வெளியேறினார். இந்நிலையில், மணிப்பூர் மக்கள், தேர்தலில் தன்னை தோல்வியடையச் செய்ததால், வேதனையை மறப்பதற்காக கொடைக்கானலில் குடியேறினார். அங்குள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனது காதலர், தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோவுடன் கொடைக்கானலில் தங்கி இருக்கும் இரோம், விரைவில் தனது காதலரை திருமணம் செய்துகொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். 

இரோம் சர்மிளா

கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலை மிகவும் பிடித்துவிட்டதாகவும்  இனி, தனது மீதி வாழ்நாள் முழுவதையும் இங்குதான் கழிப்பேன் எனவும் இரோம் தெரிவித்திருந்தார்.ஒரு சராசரி பெண்ணாக, தனது அன்றாட பணிகளைச் செய்துவருகிறார். பரபரப்பு நிறைந்த வாழ்க்கையைத் துறந்து, அமைதியாக தனது காதலருடன் வசித்துவருகிறார். விரைவில், தனது காதலரைத் திருமணம் செய்துகொண்டு, தனது குடும்ப வாழ்க்கையைத் தொடர்வேன்,  எங்கள் திருமணம் எளிமையாக நடக்கும்‘ எனத் தெரிவித்திருந்தார். திருமணம் தொடர்பாக, காதலருக்கு அவரது நாட்டிலிருந்து கிடைக்கவேண்டிய அனுமதிக் கடிதத்துக்காகக் காத்திருந்தனர்.

இந்நிலையில், அனுமதிக் கடிதம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, விரைவில் இரோம் சர்மிளாவின் திருமணம் நடைபெறும் எனத் தகவல் வெளியானது. கொடைக்கானலில் இருக்கும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களின் உரிமைக்காகப் போராடுவேன் என இரோம் சர்மிளா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விரும்பாத மத்திய, மாநில அரசுகள் திருமணத்துக்கான அனுமதிக் கடிதம் அளிப்பதில் தாமதம் ஏற்படுத்தின எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. தனது திருமணம் தொடர்பாக முன்னரே தகவல் தெரிந்தால், அது பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், தற்போது வரை திருமணம் எப்போது நடக்கும் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார், இரோம் சர்மிளா.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, தனது காதலரை திருமணம் செய்துகொள்வதற்கான விண்ணப்பத்தை, கொடைக்கானல் பதிவாளர் அலுவலகத்தில் இரோம் சர்மிளா அளிக்க இருக்கிறார். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், இன்றைக்கே திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது என இரோம் சர்மிளாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைக்குத் திருமணம் நடைபெறுமா  என்ற பரபரப்பு நிலவிவருகிறது.  

இரோம் சர்மிளாவின் காதலர் தேஸ்மாண்ட் ஹட், உலகம் முழுக்க உள்ள போராளிகளுக்கான சமூக வளைதளம்  ஒன்றின் அட்மினாக இருக்கிறார். இரோம் சர்மிளா எழுதிய 'பர்னிங் ஆஃப் பிரைட்' புத்தகத்தைப் படித்துவிட்டு, அவர் மீது காதல்கொண்டார். நான்கு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகே, சம்மதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரோம் சர்மிளா கொடைக்கானலில் தங்கியிருப்பதால், தங்களுக்குத் தேவையில்லாத தலைவலி. அவர் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பவேண்டியிருக்கிறது என்பதால், உளவுத்துறை போலீஸார் அதிருப்தியில் இருக்கின்றனர். இரோம் சர்மிளாவை கொடைக்கானலை விட்டு, விரைவில் கிளப்பிவிடுவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close