Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கச்சிமடம் வன்முறை : 30 பேர் மீது வழக்குப்பதிவு!

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஜெகன் என்பவர் மீது நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போக போலீஸார் கூறவே பிரச்னை வெடித்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கல் வீச்சில் ஈடுபட்டதுடன் பேருந்து ஒன்றுக்கும் தீ வைத்தனர். இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

 

இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் ஆயுதப்படை போலீஸார் தங்கச்சிமடம் வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று இரவு முழுவதும் பதற்றம் நிலவியது. மீனவர் ஜெகன் மீது மோதிய பேருந்தின் ஓட்டுநர் சண்முகவேலு பாம்பன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து பலியான ஜெகனின் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று காலை பிரேதப் பரிசோதனைக்குப் பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கச்சிமடத்தில் நேற்று இரவு நடந்த வன்முறையில் 3 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கண்காணிப்பாளர்கள் வெள்ளைத்துரை, இன்பமணி ஆகியோர் தலைமையில் போலீஸார் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close