Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிறந்ததினம் இன்று!

தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் நிறுவன சிஇஓ, சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் இன்று.

சுந்தர் பிச்சை

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை, பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடி-யில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார். கல்வியில் சிறந்து விளக்கிய சுந்தர் பிச்சைக்கு, அமெரிக்க ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 2004-ம் ஆண்டு, அமெரிக்க கூகுள் நிறுவனத்தில் இணைந்தவர், க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு போன்ற செயலிகள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து கூகுள் சர்ச், விளம்பரம், கூகுள் மேப், யூ-டியூப் போன்ற அந்த நிறுவனத்தின் பல தயாரிப்புகளில் தன் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதனால், அடுத்தடுத்து கூகுள் நிறுவனத்தின் முக்கியமான பல உயர் பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டார்.

மென்பொருள்துறையின் அடுத்தடுத்த பரிணாமங்களைத் துல்லியமாகக் கணித்து, வாடிக்கையாளர்களுக்கு கணினி வழிச் செயல்பாடுகளை எளிதாக்கினார். 2015-ம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் நியமிக்கப்பட்டு, தற்போது அந்தப் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டுவருகிறார். குறிப்பாக, கூகுள் நிறுவனத் தலைமைப் பொறுப்புக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வேகம்பெற்றுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்த நபர்களில் ஒருவரான சுந்தர் பிச்சை, இன்று தன் 45-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close