Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆடியோ விழா!

விக்ரம், தனது வித்தியாசமான நடிப்பால் வெளிவந்த 'இருமுகன்' படத்துக்குப் பிறகு, இப்போது  'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம், கெளதம் மேனன் இயக்கிவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

vikram
 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான த்ரிஷா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், நயன்தாரா  ஆகியோர் விக்ரமுடன்  நடித்துவிட்டனர். முதன்முதலாக தமன்னா இப்போதுதான் விக்ரம் ஜோடியாக  'ஸ்கெட்ச்' படத்தில் நடித்திருக்கிறார். தமன்னாவுக்கு முன்பு மலையாள நடிகை சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பு தமனாவுக்குக் கிடைத்தது.

விக்ரமைப் பொறுத்தவரை கமர்ஷியல் ஹீரோ, ஹார்டு வொர்க் ஹீரோ என அவருக்கு இரண்டு முகம் உண்டு. 'ஜெமினி', 'சாமி', 'தூள்' என்று முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்த படங்கள் பெரும் வெற்றிபெற்றன. 'சேது', 'பிதாமகன்', ' ஐ' படங்களில் தன்னுடைய உடலை வருத்தி ஹோம் வொர்க் செய்து நடித்த படங்கள், விக்ரமுக்கு பெரும் புகழையும் விருதுகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. இப்போது, விஜய் சுந்தர் இயக்கத்தில் நடித்துவரும் 'ஸ்கெட்ச்' திரைப்படம், முழுக்க முழுக்க க்ரைம் ப்ளஸ் ஆக்‌ஷன் கலந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களின் ஆடியோ விழாக்கள், சென்னையிலும் மும்பையிலும் நடந்திருக்கின்றன. ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தின் ஆடியோ விழாவை சிங்கப்பூரில் பிரமாண்டமாகக் கொண்டாடியது அந்தப் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

இப்போது விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச்' படத்தின் ஆடியோ விழாவை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டு வருகிறார் வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு. ஏற்கெனவே செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஹீரோவாக தனுஷும் கஜோலும் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் ஆடியோ விழாவை எஸ்.தாணு மும்பையில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close