திலீப்பின் 300 கோடி சொத்துகள்? அமலாக்கத்துறை அடுத்த அதிரடி

மலையாள நடிகை ஒருவர்  கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்தான் நடிகையை கடத்தியதற்கு காரணம் என்று பலர் நம்பி இருந்தனர். நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸாருக்கு எந்த சரியான ஆதாரமும் சிக்காமல் இருந்தது.

 

actor Dileep

அதன்பின் பல ஆதாரங்களும் போலீஸாரிடம் சிக்க, நேற்று முன்தினம்  காலை ஆலுவா போலீஸ் கிளப்புக்கு திலீப்பை போலீஸார் அழைத்தனர். அவரிடம் 12 மணிநேரம் நடந்த தீவிர விசாரணைக்குப் பின் மாலை 6.20 க்கு போலீஸார், திலீப்பை கைது செய்தனர். தற்போது ஆலுவா சப் ஜெயிலில் திலீப் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியர், 2-வது மனைவி காவ்யா மாதவன், நடிகை பாவனா ஆகியோர் சேர்ந்து  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இவர்கள் கேரளாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி விற்பனை செய்துவந்தனர்.

நெருங்கிய நட்பு காரணமாக நடிகை பாவனாவை திலீப் பினாமியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். அதனால், பல இடங்களை பாவனா பெயரில் திலீப் வாங்கியுள்ளார். திலீப்பிடம் கறுப்புப் பணம் 300 கோடி இருப்பதாக அமலாக்கத் துறைக்கு பல புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது அவர்கள், திலீப்பின் சொத்து விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் திலீப் தலைமையில் நடந்த நட்சத்திர நிகழ்ச்சிகளின் மூலம் பல கோடி சம்பாதித்து உள்ளாராம். அதை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை செய்ய அமலாக்கத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக நடிகர் திலீப்பின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை காத்திருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!