'மத கலவரத்தால் பா.ஜ.க.வை வளர்க்க முடியும் என நினைக்கிறார்கள்' : ஜி. ராமகிருஷ்ணன் 

கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஸ்தாபன பயிற்சி பட்டறையில்  கலந்து கொள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வந்திருந்தார்.

செய்தியாளர்களிடம்  அவர் பேசிய போது 'உச்சநீதிமன்றம் மத்திய அரசு விலங்கு வதை தடைச்சட்டத்தின் அடிப்படையில் பசு உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்காக சந்தையில் விற்கக்கூடாது என்ற அறிவிப்பை உச்சநீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றம்  தடை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். மத்திய அரசு அந்த அறிவிப்பு முழுவதையும் வாபஸ் வாங்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலை வாசி குறையவில்லை. பண மதிப்பிழப்பு  ஏற்படும் சிறு,குரு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.தமிழகத்தில்  பட்டாசு, தீப்பெட்டி,என பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலை குறையும் என பிரதமர் மோடி  பேசினார். ஆனால் ஜி.எஸ்.டி.யால் விலைவாசி உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எஸ்.சி., பி.சி பிரிவினருக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அதிக அபராதம் போடுவதை தடுக்க மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படாத நிலையில் இலங்கை அரசு சட்டப்பூர்வமாக பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல .அ.தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியில்  கூறியது  போல  படிப்படியாக மது விலக்கினை கொண்டு வர  வேண்டும்.

மத கலவரத்தால் பா.ஜ.க.வை வளர்க்க முடியும் என நினைத்து தமிழகத்தில் மத கலவரம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளரை  ஆதரிக்க அதிமுகவினர் போட்டி போடுகிறார்கள். அதின் மூன்று கோஷ்டிகளும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கும் போதும் மூன்று அதிமுக அணிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தில்  காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சுதந்திர போராட்டத்தில் பங்குகொள்ளாத ஆர் எஸ்.எஸ். ஆகஸ்ட் 9ம் தேதி பற்றி ஏன் பேசுகிறார்கள் என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில அரசு ஏமாற்றுகிறது. சட்டசபை, நாடாளுமன்றம் போல உள்ளாட்சிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்.தமிழகத்தில் அதிகமாக செயல்படும்  கூலிப்படைமீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது’, என்று அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!