’போராடினால் நக்சல்களா..?’: சேலத்தில் சீறிய இளம்பெண்!

‘இயற்கையைப் பாதுகாப்போம்... விவசாயிகளைக் காப்போம்’ எனக் கூறும் அத்தனை பேரும் நக்சல்கள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள் என சீறுகிறார் சேலத்தைச் சேர்ந்த வளர்மதி.

சேலம் பெண் வளர்மதி


'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன்கூடிய துண்டுப் பிரசுரங்களை கல்லூரி வாசல்களில் விநியோகித்து வந்த இரு பெண்கள் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு பெண்களும் நக்சல்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, இவர்கள் நக்சல் அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கிறார்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். வளர்மதி, ஜெயந்தி ஆகிய இரு பெண்களும் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர்.

பெண் போலீஸார் கட்டுப்பாட்டையும் மீறி பத்திரிகையாளர்களைச் சந்திக்க முற்பட்ட வளர்மதியை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். போலீஸாரின் தடையையும் மீறி பத்திரிகையாளர்களிடம் பேசிய வளர்மதி கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கல்லூரி வாயிலில் நோட்டீஸ் விநியோகத்தில் இருந்தோம். எங்களை நக்சல்கள் எனக் குற்றம் சுமத்தி அடித்து இழுத்து வந்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர். ’விவசாயிகளைக் காப்போம்’ என்ற வார்த்தை மத்திய அரசுக்கு எதிரானதா?’ என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகியோர் மீது அரசுக்கு எதிராகக் கலகத்தை உருவாக்கியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!