சோனிகா சவுகான் மரண வழக்கு: நடிகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | Sonika Chauhan death case: Court dismissed bail appeal of actor Vikram Chatterjee

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (12/07/2017)

கடைசி தொடர்பு:17:57 (12/07/2017)

சோனிகா சவுகான் மரண வழக்கு: நடிகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பிரபல மாடல் நடிகை சோனிகா சவுகான் மரண வழக்கில், முன்ஜாமீன் கோரிய நடிகர் விக்ரம் சாட்டர்ஜியின் மனுவை தள்ளுபடி செய்தது கொல்கத்தா நீதிமன்றம். 

sonika, சோனிகா

கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மாடல் நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கார் விபத்தில் மரணமடைந்தார். அதிகாலையில் நடிகர் விக்ரம் சாட்டர்ஜியும், சோனிகாவும் காரில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் நடிகர் விக்ரம் சாட்டர்ஜி காயங்களுடன் உயிர்த்தப்பினார். இருவருமே மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்டது.

சோனிகாவின் மரணத்தில், விக்ரம் சாட்டர்ஜி மீது சந்தேகம் இருப்பதாக சோனிகாவின் பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, விக்ரமிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். குடிபோதையில் நடிகர் விக்ரம் சாட்டர்ஜி காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தா போலீஸார் அவரை கடந்த 7ஆம் தேதி கைது செய்தனர். தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று அவர் கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.