Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிரிக்காவில் சீனாவுக்குக் கடற்படைத்தளம் ரெடி; போர்க்கப்பல்கள் புறப்பட்டன!

ஆப்பிரிக்காவின் திஜிபவுத்தி நாட்டில் சீனா அமைத்துள்ள கடற்படைத் தளத்துக்கு அந்நாட்டுப் போர்க்கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன. 

ஆப்ரிக்காவுக்கு சென்ற சீன போர்க்கப்பல்கள்

ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா, எரித்ரியா நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள குட்டி நாடு திஜிபவுத்தி. வறுமையில் வாடும் நாட்டின் இயலாமையைப் பயன்படுத்தி ஏற்கெனவே அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி நாடுகள் ராணுவத்தளங்களை அமைத்துள்ளன. அமெரிக்கத் துருப்புகள் மட்டும் 4 ஆயிரம் பேர் இங்கு உள்ளனர். விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவதாக சீனா வாக்களித்து, இந்நாட்டில் கடற்படைத்தளத்தை அமைத்து வந்தது. இதையடுத்து, பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஷான்ஜியாங் நகரில் இருந்து சீனப் போர்க்கப்பல்கள் அங்கு புறப்பட்டு சென்றன. 

உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமன் இந்த நாட்டில் இருந்து 20 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளது. ஏமனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல நாட்டு ராணுவ வீரர்களும் இங்கு தங்கியுள்ளனர். சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்குவா, ''திஜிபவுத்தி நாட்டில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தை வலுப்படுத்துவதற்காகவும் உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாகவும் சீனப் போர்க்கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றன'' என செய்தி வெளியிட்டுள்ளது.

திஜிபவுத்தி நாட்டில் சீனா கடற்படைத் தளத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு ஆபத்தானதே. ஏனென்றால் இங்கிருந்து இந்தியப் பெருங்கடலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். 'இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவுக்குச் சொந்தமானது இல்லை'  என்றும் அடிக்கடி சீனத் தலைவர்கள் கூறுவது உண்டு. மேலும், வெளிநாட்டில் சீனா கடற்படைத் தளத்தை அமைத்திருப்பதும் இதுவே முதன்முறை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement