திருப்பதி செல்லும் சாலையில் ஆறு மாதத்தில் 58 விபத்துகள்!

திருப்பதி

திருப்பதி செல்லும் சாலையில், இந்த ஆண்டு மட்டும், சுமார் 58 விபத்துகள் நடந்துள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம், அனுபவமில்லாத ஓட்டுநர்களும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் செல்வதும்தான் என்று தெரியவந்துள்ளது. மேலும், திருப்பதி பக்தர்களை ஏற்றிச்செல்லும் உள்ளூர் ஜீப்கள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்வதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.  2016-ம் ஆண்டு மட்டும் இந்தச் சாலையில் 106-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.

இந்த விபத்துகளைத் தடுக்க, திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டி பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இத்தகைய காரணங்களுக்காக, தேவஸ்தானம் கடந்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 30 ஜீப்களை நிரந்தரமாகத் தடை செய்து உத்தரவிட்டது. இந்தச் சாலையில் செல்லும் தனியார் வாகனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். 

திருமலையிலிருந்து திருப்பதி வர 28 நிமிடங்களாகிறது மற்றும் திருப்பதியிலிருந்து திருமலை செல்ல 40 நிமிடங்களாகிறது. ஆனால், சராசரியாக 350 வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே செல்கின்றன. இதனைத் தொடர்ந்து,  திருப்பதி பகுதியில் புதிதாகப் பதவியேற்றுள்ள தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி அகே  ரவி கிருஷ்ணா, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!