கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றிய பெண்!

அமெரிக்காவில் கடலில் தத்தளித்தவர்களை மனிதச் சங்கிலி அமைத்து ஒரு பெண் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கடல்

அமெரிக்காவில் கடலில் தத்தளித்த 9 பேரைக் கடற்கறையில் இருந்த 80 பேர் மனிதச் சங்கிலி அமைத்து காப்பாற்றி அசத்தியுள்ளனர். ஃபுளோரிடாவின் பனாமா நகர கடற்கரையில் எப்போதும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவது வழக்கம்.  சமீபத்தில் பனாமா கடலில் குளித்துக்கொண்டிருந்த ராபர்டோ உர்ஸ்ரே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திடீரென அலைகளில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற 3 நீச்சல் வீரர்களும் அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால், கடலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற முடியுமா என்ற அவஸ்தையில் சுற்றியிருந்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். 

கடலில் சிக்கியவர்களைச் சுற்றி சுறா மீன் ஒன்று வட்டமடித்துள்ளது. ’9 பேரும் இனி மீளவே முடியாது’, என்ற மரண பீதியில் பயந்து கூச்சல் போடத் துவங்கினர். அனைவரும் செய்வது அறியாமல் தத்தளித்த சூழலில் கடற்கரையில் இந்தக் காட்சிகளைப் பார்த்த ஜெஸிகா மே சிம்மன்ஸ் என்பவர் தனது 8 மற்றும் 11 வயது மகன்களின் உதவியுடன் கடற்கரையில் இருந்த மற்றவர்களையும் உதவிக்கு அழைத்துள்ளார். அங்கிருந்த சுமார் 80 பேரின் உதவியுடன் மனிதச் சங்கிலி அமைத்து கடலில் உயிருக்குப் போராடியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இந்த முயற்சியில் உயிருக்குப் போராடிய 9 பேரையும் பத்திரமாகக் கரை சேர்த்தது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!