Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

குடிநீர் ஏரி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது. இதையடுத்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சிறிது நீர்மட்டம் அதிகரித்துள்ளது.


பூண்டி ஏரியில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 18 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இப்போது, 19 மி. க. அடியாக உள்ளது. ரெட் ஹில்ஸ் ஏரியில் இரண்டு நாள்களுக்கு முன்பு, 5 மி.கன அடி தண்ணீர் இருந்தது. இப்போது, 6 மி.கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு, 56 மி.க. அடியாக இருந்தது. இப்போது 78 மி.க. அடியாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை 79 மி.கன அடி நீர் இருந்தது. இப்போது, 103 மி.கன அடியாக அதிகரித்துள்ளது.


இதே போன்று மழை தொடரும் பட்சத்தில், ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு இருக்கிறது. ஏரிகளிலிருந்து சென்னைக்கு குடிநீர் எடுப்பது  சில நாள்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பதில், உவர் நீரை குடிநீராக்கும் திட்டம், கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், நெய்வேலியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், கல் குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், போரூர் ஏரியிலி  ருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகியவற்றைக்கொண்டு இப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மழை தொடரும் பட்சத்தில் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close