Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

section 144

ராஜஸ்தானின் நாக்பூர், சாரு, சிக்கர் மற்றம் பிக்கனிர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், பிரபல ரவுடி ஆனந்த் பால்சிங் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, ராஜ்புத் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும் ராஜ்புத் சமூக மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாரும் பொதுமக்களில் சிலரும் காயமடைந்தனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த, மாநில நிர்வாகம் இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே நடமாட்டம் இன்றி வீட்டுக்குள்ளேயே உள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாளை வரை இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. காவல்துறையைச் சேர்ந்த 16 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement