Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"காவிரி தீர்ப்பின் இறுதிமுடிவை உச்ச நீதிமன்றமே அறிவிக்கும்" - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

உச்சநீதிமன்றம்

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை, கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விசாரணை 15 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிர்தவராய், கான் வில்கர் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கர்நாடகா தரப்பில் ஆஜரான ஃபாலி எஸ்.நாரிமன், தமிழகத்தின்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசின் தரப்பில் முன்பே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அப்போது விளக்கப்பட்டது.

காவிரி நதிநீருக்காக இரண்டு மாநிலங்கள் சண்டையிடுவதை தாங்கள் விரும்பவில்லை. இரண்டு மாநிலங்களுமே இந்த நாட்டின் ஒரு அங்கம்தான் என நீதிபதிகள் பதிலளித்தனர். மேலும், இந்த வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. முன்னர் காவிரி நடுவர் மன்றத்தில் எடுத்துவைத்த வாதங்களை மீண்டும் எடுத்துவைக்க வேண்டாம்’ என அந்தந்த மாநில வக்கீல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி முடிவை உச்ச நீதிமன்றமே அறிவிக்கும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close