Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் மாணவர்கள் ரஷ்யா போறாங்க!

மாணவர்கள்

 

ரஷ்ய அரசின் அணு ஆற்றல் கழகமான ‘ரொசாட்டம்’, உலக அளவிலான குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கிவருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் பணியாளர்களின் குழந்தைகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவில் பன்னாட்டு இசை விழாவை நடத்திவருகிறது.  அதற்காக, கூடங்குளம் மாணவர்கள் ரஷ்யா செல்லவிருக்கிறார்கள்.

 இந்த ஆண்டு, கூடங்குளம் அணுமின் நிலைய மையப் பள்ளியில் படிக்கும் பணியாளர்களின் குழந்தைகள் ஆர்.பூர்ணபிரகாஷ், ஆர். சூரியகுமார், கே.ஹரிஹரன் ஆகிய மூன்று  மாணவர்கள், தகுதிப் போட்டிகள்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இன்று ரஷ்யா கிளம்புகின்றனர். 

ரஷ்யாவில், இவர்களுக்கு இசை, நடனம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சியுடன், பிற நாட்டு மாணவர்களுடன் பழகுதல் எனப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கும். ரஷ்யாவில் உள்ள அணு மின் நிலையங்களைச் சுற்றிப் பார்க்கவும் மாணவர்கள் அனுமதிப்படுவார்கள். 

கூடங்குளம் அணுமின் நிலையப் பள்ளி மாணவர்கள், 2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை  மூன்று முறை ரஷ்யா சென்று வந்துள்ளனர். இது நான்காவது முறையாகும். 

சர்வதேச அளவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வதால், அவர்களின் சிந்தனையை மேம்படுத்தும். பிற நாட்டு மாணவர்களைச் சந்தித்து, அவர்களோடு பழகுவதன்  மூலம் அந்த நாட்டு கலாசாரங்களை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யப் பயணம் முடித்துத் திரும்பும் மாணவர்கள் வாழ்வில், இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement