Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொழிலாளர்கள் போராட்டம்!

நெய்வேலி என்.எல்.சி

நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நாள்கள் குறைக்கப்பட்டதால், இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 26 நாள்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 19 நாள்களாக அது குறைக்கப்பட்டது. இதற்கு தங்கள் சார்பில் கண்டனம் தெரிவித்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கரி விற்பனை குறைந்து வருவதால்தான் பணி நாள்கள் குறைத்துள்ளதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமானத் தீர்வு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக வாணிகிபுரம், குரவன்குப்பம், சேப்பளநத்தம், பெரியகுறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலக்கரி சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய 500 பேரைத்தான் என்எல்சி ஒப்பந்த ஊழியர்களாக நிர்ணயித்திருந்தது. இந்நிலையில்தான் வேலை நாள்களைக் குறைப்பதற்காக என்எல்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. இதையடுத்தே ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close