வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (13/07/2017)

கடைசி தொடர்பு:16:39 (13/07/2017)

சக்ரி டொலெட்டி இயக்கத்தில் நயன்தாரா, தமன்னா, சோனாக்ஷி

தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமலை இயக்கியவர், அமெரிக்க வாழ் தெலுங்கரான சக்ரி டோலெட்டி. அதன்பின் அஜித்குமார் நடித்த 'பில்லா-2' படத்தை டைரக்‌ஷன் செய்தார். இந்தப் படத்தில் அஜித்தை தவிர, இடம்பெற்ற ஏனைய பெரும்பாலான நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் இல்லாத காரணத்தால் 'பில்லா-1' வெற்றி பெற்ற அளவுக்கு 'பில்லா-2' ஜெயிக்கவில்லை. இப்போது 'கொலையுதிர் காலம்' படத்தை இயக்கியுள்ளார் சக்ரி. ஹீரோயின் ஓரியன்ட்டடு சப்ஜெக்ட்டான இந்தப் படத்தில் வாய்பேசாத, காதுகேட்காத கேரக்டரில் நயன்தாரா நடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க லண்டன் பின்புலத்தில் 'கொலையுதிர் காலம்' திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக காதுகேளாத, வாய்பேசாத குழந்தைகளின் பள்ளிக்கூடத்துக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளின் உணர்வுளை வீடியோ எடுத்துக் கொண்டார் நயன்தாரா. தனது வீட்டில் அந்த வீடியோவை பார்த்து ஹோம்-ஒர்க் செய்து நடிக்க பழகினார். அதன் பிறகே லண்டன் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தமிழில் முழுவதும் படம் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மட்டும்  நடந்து வருகிறது. தமிழில் நயன்தாரா நடித்த கேரக்டரில் இந்தியில் தமன்னா நடித்துள்ளார். லண்டனில் நடந்த இந்தி 'கொலையுதிர் காலம்' படத்தை 15 நாளில் தமன்னாவை நடிக்க வைத்து முடித்துவிட்டார் சக்ரி. தமிழ், இந்தி மொழிகளில் உருவாகும் 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தில் நயன்தாராவும் தமன்னாவும் போட்டிபோட்டு நடித்து இருப்பதாக சக்ரி சர்ட்டிஃபிகேட் கொடுத்து இருக்கிறார். அடுத்து முழுக்க முழுக்க த்ரில் படம் ஒன்றை சோனாக்‌ஷி சின்ஹாவை ஹீரோயினாக வைத்து இந்தியில் இயக்கப்போகிறார் சக்ரி டோலெட்டி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க