விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை..! | Farmers union representatives met M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (13/07/2017)

கடைசி தொடர்பு:16:47 (13/07/2017)

விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை..!

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தி.மு.க அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 
 


[X] Close

[X] Close