Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறப்பு விருந்தினராக அழைத்தால், 100 மரக்கன்றுகள் வழங்கும் டி.ஆர்.ஓ! - கரூர் ஜரூர்

                         கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ் மரக்கன்றுகள் வழங்கினார்

 'அரசு அதிகாரிகள்னாலே, லஞ்ச-லாவண்யமும், கூடவே திமிரும் நிறைந்தவர்கள்' என்ற பிம்பம்தான் நம் கண்முன் வந்துபோகும். அதுவும் உயரதிகாரிகள் என்றால், சொல்லவே வேண்டாம். 'அதிகார பூட்சில் மக்கள் நலனை கீழேபோட்டு மிதிப்பவர்கள்' என்ற பதமே நம் மனக்கண் முன் நிழலாடும். ஆனால், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ் முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார்.

 கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ்

மாவட்ட வருவாய் அலுவலர் பணி என்பது பணிச்சுமை நிறைந்தது. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் யார் இவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்தாலும், உடனே தேதி கொடுக்கிறார். அதுவல்ல, இந்தக் கட்டுரைக்கான அவசியம். சொந்தச் செலவில் கையோடு நூறு மரக்கன்றுகளை, அவர் கலந்துகொள்ளப்போகும் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குக் கொண்டு செல்கிறார். அவற்றில் ஐம்பதைப் பள்ளிக்கும், மீதி ஐம்பதைப் பொதுமக்களுக்கும் கொடுத்து, 'மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்' என்ற அறிவுரையோடு மரக்கன்றுகளை நடச்செய்கிறார். வாரத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களுக்காவது இப்படி மரக்கன்றுகளும், சேவையுமாகப் போய் கலந்து கொள்கிறார். அதோடு,கரூர் மாவட்டம் முழுக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக ஒவ்வொர் ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, 'எங்கும் பசுமை எதிலும் பசுமை' என்ற உன்னதநிலையை ஏற்படுத்த இருக்கிறார். இதுவரை, இவர் கரங்களால் கரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. 

 கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ்

நாமோ,'வழக்கமான ஒரு விழா, வழக்கமான ஒரு சீப்கெஸ்ட் அதிகாரி' என்றேதான் சாதாரணமாக எடைப்போட்டோம். ஆனால், மனோகர் என்ற ஆசிரியர் டி.ஆர்.ஓவை பற்றி விவரிக்கவும்தான், 'இவர் வழக்கமான 'சீப் கெஸ்ட்' அதிகாரி இல்லை. இவர் அதுக்கு மேல..வேற லெவல் அதிகாரி' என்ற மின்னல் நம் மனதை மினுக்கென வெட்டியது. கையோடு, மற்றொரு ஊரான கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மணவாசி என்ற கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இதேபோல் நடந்த மரம் நடு விழா, சூழல் பேணல் விழாவில் டி.ஆர்.ஓ கலந்து கொள்ள, நாமும் ஆஜரானோம். அங்கேயும்,கையோடு கொண்டு போன நூறு மரக்கன்றுகளைக் கொடுத்தல்,பள்ளி சார்பாக வழங்கிய மரக்கன்றுகளை நடல், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பை பற்றியும், அதனால் ஏற்படும் சூழலியல் மாற்றம் பற்றியும் பேசல் என்று தூள் கிளப்பினார். 

 கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று ஒருவிழா நடைபெற்றது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை உமா ஏற்பாட்டில், 'பசுமை பத்தாயிரம்' என்ற பெயரில் பள்ளி வளாகம் மட்டுமன்றி கிராமம் முழுக்க பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் முயற்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் நிகழ்வின் தொடக்கம் அது. இந்த நிகழ்ச்சிக்குக் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விழாவில் பங்கேற்ற அவர் நூறு மரக்கன்றுகள் கொடுத்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவரே பள்ளி வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளையும் நட்டார். 

அப்போது, சூர்யப்பிரகாஷ், 'இயற்கையின் படைப்பில் மரங்கள் உன்னதமானவை. ஆனால், மனிதர்களாகிய நாம், நம்மைநாமே மேன்மையான படைப்புகளாக நினைத்துக் கொண்டு, மரங்களை சுயநலத்தோடு அழித்து, நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்கிறோம். நாம் இல்லாமல் மரங்கள் வருடக்கணக்கில் வாழும். மரங்கள் இல்லாவிட்டால், நொடிப்பொழுதில் மரணம் நம்மை ஆட்கொள்ளும். அதனால், மரங்கள் வளர்ப்பதை நாம் தினமும் மூன்று வேளை சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவதுபோல் அனிச்சை செயலாக மாற்றிக்கொள்ள வேண்டும். மரம் வளர்ப்பு சிந்தனை மற்ற எல்லாரையும்விட இளைய தலைமுறையினரான, அடுத்து நாட்டைத் தோளில் சுமக்க இருக்கிற மாணவர்களாகிய உங்களுக்குத்தான் அதிகம் வர வேண்டும். அதற்காகத்தான் இந்தவிழா' என்று பேசி அப்ளாஸ் பெற்றார். 

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ்

சாதாரணமாக எடைபோட்டோம். ஆனால், மனோகர் என்ற ஆசிரியர், டி.ஆர்.ஓவைப் பற்றி விவரிக்கவும்தான், 'இவர் வழக்கமான 'சீப் கெஸ்ட்' அதிகாரி இல்லை. இவர் அதுக்கும் மேல...வேற லெவல் அதிகாரி' என்ற மின்னல் நம் மனதை மினுக்கென வெட்டியது. மற்றொரு ஊரான கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மணவாசி என்ற கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இதேபோல் நடந்த மரம் நடுவிழா, சூழல் பேணல் விழாவிலும் டி.ஆர்.ஓ கலந்து கொள்ள, நாமும் அங்கு ஆஜரானோம். அங்கேயும், கையோடு கொண்டுபோன நூறு மரக்கன்றுகளைக் கொடுத்தல், பள்ளி சார்பாக வழங்கிய மரக்கன்றுகளை நடுதல், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பைப் பற்றியும், அதனால் ஏற்படும் சூழலியல் மாற்றம் பற்றியும் பேசுதல் என்று அவர் தூள் கிளப்பினார்.

நமக்கோ 'பொறுத்தது போதும்..போய்ப் பேசு' என்று ஆர்வம் உந்தித்தள்ள, டி.ஆர்.ஓ சூர்யப்பிரகாஷிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, 'எப்படி சார் உங்களால் இதெல்லாம் முடிகிறது?' என்று கேட்டுப் பேசத்தொடங்கினோம். "இதைப் பெருமைக்காகவோ, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொள்ளவோ நான் செய்யவில்லை. தற்போது சுற்றுச்சூழல் பருவ மாற்றம், பூமி வெப்பமயமாதல், வரலாறு காணாத வறட்சி அல்லது வெள்ளம் என சகலதிசையிலும் உருமாறி, பூமியை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது. அதற்குக்காரணம், வகைதொகையில்லாம மரங்களை வெட்டிச் சாய்ப்பதுதான். இப்போது நாம் விழித்துக் கொள்ளவேண்டிய நேரம். இல்லையென்றால், பூமிப் பந்தையும், நம்மையும் யாராலும் காப்பாற்ற முடியாது" என்றவர் தொடர்ந்து பேசினார். 

 கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யப்பிரகாஷ்

"எனக்குச் சொந்த ஊர் பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி. விவசாயக் குடும்பம் என்பதால், இயற்கைமேல் இயல்பாகவே எனக்கு ஈடுபாடு இருந்தது. 2008-ல் கடலூரில் போஸ்டிங். அங்குதான் முதன்முறையாக இப்படி மரக்கன்றுகள் கொடுக்கும் பணியைத் தொடங்கினேன். அதுமாதிரி, மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ள அமைப்புகள் நடத்தும் விழாக்களுக்குப் போய் கலந்துகொண்டு மரம் வளர்ப்பைப் பற்றி வலியுறுத்தினேன். 2016-ம் வருஷம் அக்டோபர் மாதம் கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ-வா பணிக்கு வந்தேன். அதிலிருந்தே வாரத்தில் இரண்டு நாள்கள் சூழல் சம்பந்தமாக, மரக்கன்றுகள் வளர்ப்பு சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அமைப்புகள்னு யார் விழா நடத்தினாலும், விழாவில் கலந்துகொள்ள அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் நான் போய் கலந்து கொள்வேன். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும் சிறப்பு விருந்தினராகப் போய் மரக்கன்றுகள் வழங்கி இருக்கிறேன். ஐநூறு மரக்கன்றுகளை மாவட்டம் முழுக்க நட்டிருக்கிறேன். வெறுமனே நடுவதோடு நிற்காமல், அவற்றைப் பராமரிக்க ஏற்பாடு செய்து, அதைத்தொடர்ந்து கண்காணித்தும் வருகிறேன். கரூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்களை உருவாக்கும் திட்டத்தை கலெக்டர் கோவிந்தராஜ் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள இருக்கிறோம். கடந்த ஜூன் 15-ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் பேசி, அவர்கள் சார்ந்த பள்ளி வளாகம் மற்றும் கிராமங்களில் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கச்சொல்லி அறிவுறுத்தினேன். அனைவரும் ஆர்வமாக, 'கண்டிப்பாக செய்றோம்னு' உறுதி அளித்துள்ளனர். என் வாழ்நாளுக்குள் ஒரு கோடி மரக்கன்றுகளையாவது நட்டு விடவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறேன். அதேபோல், அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் உள்ள உதவும் உள்ளங்கள் 88 பேர் சேர்ந்து 'விடியல் நண்பர்கள்' என்றும் வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கியுள்ளோம். அனைவரும் சேர்ந்து, படிக்க வசதியில்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கிறோம். மரக்கன்றுகளை நடும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாம் அனைவரும் தூண்டுகோலாக இருந்தால் போதும். மரங்கள் பெருகும். மழை அதிகம் பொழியும். வரலாறுகாணாத வறட்சி ஓடி மறையும்" என்றார் முத்தாய்ப்பாக!.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close