Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடலோர மக்களின் தாகம் தீர்க்கும் நீரூற்றுகள்!

53 ஆண்டுகளுக்கு முன் அழகிய துறைமுகமாக விளங்கிய நகரம் தனுஷ்கோடி. ஆங்கிலேயர்களின் கடல் வழி போக்குவரத்துக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த கடல் நகரமும்கூட. 1964-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் உருக்குலைந்து போனது. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் புயலுக்கு முன் அங்கே வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலுக்கு 'வாட்டார் டேங்' எனப் பெயரிட்டு அழைத்தனர் மக்கள். 

புயலால் உருக்குலைந்து போன தனுஷ்கோடியை ’வாழத் தகுதி அற்ற பகுதி’ என அரசு அறிவித்தது. இதனால், அங்கு வசித்து வந்த பலதரப்பட்ட மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால், மீன் பிடித்தலைத் தவிர, வேறு வேலை ஏதும் தெரியாத மீனவ மக்கள் பலர் அங்கேயே தங்கினர். சாலை, மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத தனுஷ்கோடியில் தங்களின் தொழில் காரணமாக மீனவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை உருவானது. மின்சாரம், சாலை வசதி இன்றி வாழ்ந்துவிடலாம் என எண்ணி வாழத் தொடங்கிய மீனவர்கள் தங்களின் தாகத்தைத் தீர்க்க குடிநீருக்காகத் தவித்த நிலையில் மீனவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கடலோர நீர் ஊற்றுகள். 

முகுந்தராயர் சத்திரம், தாவுகாடு, கம்பிபாடு, பாலம் போன்ற பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களிலிருந்து சில அடி தூரத்தில் இதுபோன்ற ஊற்றுகள் தோண்டப்படுகின்றன. சுமார் 5 அடி ஆழத்தில் தோண்டப்படும் ஊற்றில் ஊற்றெடுக்கும் தண்ணீரை அகப்பை மூலம் சிறுகச் சிறுகச் சேகரித்து குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். உப்பு கரிக்கும் கடலுக்கு நடுவே எஞ்சியிருக்கும் நிலப்பரப்பில் ஊற்றெடுக்கும் இந்த நன்னீர் ஊற்றுகளை நம்பியே இப்போதும் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் தனுஷ்கோடியில் வாழ்ந்து வருகின்றனர். 

சாலை வசதி, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் என இரண்டையும் அடைந்துவிட்ட தனுஷ்கோடி மக்களுக்கு இன்னும் எட்டா நிலையில் இருப்பது குடிநீர் மட்டுமே. 

காவிரியில் இருந்து பல நூறு கி.மீ தூரத்தில் உள்ள கடல் சூழ்ந்த தீவான ராமேஸ்வரத்துக்கு குடிநீர் நாள்தோறும் வந்துகொண்டிருக்கும் நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு குடிநீரைக் கொண்டு செல்ல முயலாத நிலையில் தொடர்ந்து தாகம் தீர்த்துக்கொண்டிருக்கின்றன இந்தக் கடலோர நீரூற்றுகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close