Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காங்கிரஸின் ஊழல்களை பா.ஜ.க மூடி மறைக்கிறது!' - சுப.உதயகுமாரன் பகிரங்கக் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்களை மூடி மறைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது எனப் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சுப.உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் நடந்த போராட்டத்தின்போது, அதில் பங்கேற்றவர்கள் மீது 300-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் மீது, தேசத்துக்கு எதிராகப் போராடுதல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும், இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்குகளை போலீஸார் தற்போது தூசி தட்டி வருகின்றனர். 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதுடன் 5, 6-வது அணு உலைக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தங்கள் மீதான வழக்குகள் திரும்ப எடுக்கப்படுவதாக அணு உலைக்கு எதிரான அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சுப.உதயகுமாரன் மீதான சில வழக்குகள் தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து வள்ளியூர் நீதிமன்றத்தில் சுப.உதயகுமாரன் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’திட்டமிட்டு எங்கள் மீதான வழக்குகள் திரும்ப எடுக்கப்படுகின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியதுக்காகத் தொடரப்பட்ட இந்த வழக்குகளால் நேரமும் காலமும் விரயமாகிறது. இந்த வழக்குகள் திடீரென விசாரணைக்கு எடுக்க காவல்துறையை வலியுறுத்தியது யார் என்பது புரியவில்லை. காவல்துறையின் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு கால விரயம் ஏற்படுவதால் வழக்குக்கு வந்து செல்லும் தொகையைக் காவல்துறை வழங்க வேண்டும்.

கூடங்குளத்தின் முதல் இரு அணு உலைகளிலும் மின்சார உற்பத்தி எதுவும் நடைபெறவில்லை. 3 மற்றும் 4-வது அணு உலைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தப் போவதாக அணு சக்தித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படியானால் முதல் இரு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய உதிரிப்பாகங்கள் தரம் குறைந்தவையா? அதை அணு சக்தித்துறை அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்களா? கூடங்குளம் அணு உலைத் திட்டமே மோசடியானது. காங்கிரஸ் அரசு செய்த மோசடியைத் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மூடி மறைக்க முயல்வது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement