Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் பொது இடத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்குத் தர்ம அடி

சாலையில் நடந்து சென்ற மாணவி ஒருவரை போதையிலிருந்த இளைஞர் ஒருவர் கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர், நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் மாணவியைக் கட்டிப்பிடித்து, பாலியல் தொந்தரவு செய்ய, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அந்த இளைஞர் போதையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கோபமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கியதுடன், அவரைப் போலீஸில் ஒப்படைத்தனர். தகவலறிந்த திருச்சி கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணையில் அந்த நபர், புதுக்கோட்டை மாவட்டம், முக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபரின் பெயர் அன்பழகன் என்பதும் தெரிந்தது. அவருக்கு ஏற்காடு பகுதியில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து தப்பித்து வந்த அவர், இப்படி நடந்துகொண்டார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அன்பழகனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தப் போலீஸார், அவரை திருச்சி ஆத்மா மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close