Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை அரை இறுதிக்குத் தகுதிபெறுமா?

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என எட்டு அணிகள் இதில் கலந்துகொண்டுள்ளன. லீக்  சுற்றைப் பொறுத்தவரையில் ஒவ்வோர் அணியும் மற்ற ஏழு அணிகளுடன் தலா ஒரு போட்டி விளையாட வேண்டும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும். தற்போதைய நிலையில் அனைத்து அணிகளும் ஆறு போட்டிகளை விளையாடி முடித்திருக்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

இங்கிலாந்து, 10 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 9 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. நான்காவது இடத்தில் 8 புள்ளிகளுடன் இந்தியா உள்ளது. ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அமர்ந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டில் வென்று நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் ஒரு போட்டியில்கூட இதுவரை ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 15-ம் தேதி நடக்கும் போட்டியில், இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி கடைசி இடத்தைப் பிடிக்கும்.  

இந்தியா அரை இறுதிக்கு செல்வதில் சிக்கல்

லீக் சுற்று  கடைசிப் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது இங்கிலாந்து. இந்த மேட்சில் வென்றாலும் தோற்றாலும் பிரச்னை இல்லை. ஏனெனில், இங்கிலாந்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மற்றொரு போட்டியில் மோதுகின்றன. இதில் தென் ஆப்பிரிக்கா வென்றால், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கும் வரும். ஆஸ்திரேலியா வென்றாலும் தோற்றாலும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் அரை இறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டன. 

நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.  இந்தியாவைவிட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருக்கிறது நியூசிலாந்து. ஆகவே, இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டி மறைமுக கால் இறுதிப் போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் தோற்றால், இந்திய மகளிர் அணி மூட்டையைக் கட்டவேண்டியதுதான்.

இந்திய அணி, தன் முதல் போட்டியில் அபாரமாக ஆடி இங்கிலாந்தை வென்றது; இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நொறுக்கியது; மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானைச் சந்தித்தது. இதில் 95 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிபெற்றது. நான்காவது போட்டியில் இலங்கையை எளிதாக வென்றது. தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் 115 ரன்கள் வித்தியாத்தில் படுதோல்வி அடைந்தது. நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலியாவிடமும் சரணடைந்தது. நியூசிலாந்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கும் அதே நிலைமைதான். நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் யார் அரை இறுதிக்குச் செல்வார்கள் எனத் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement