Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வைத்த கோரிக்கை!

பாகிஸ்தான் நாட்டில் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்கு, சட்டபூர்வமாக தண்டனை அளிக்க முடியும். இதற்கென தெய்வ நிந்தனை சட்டங்கள் அந்நாட்டில் உள்ளன. ஃபேஸ்புக்கில் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த மூன்று பேர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசின் கோரிக்கைகள்

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, "சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ள மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்" என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டதையடுத்து, மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக நீக்கியது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் சில கோரிக்கைகளை தற்போது முன்வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் உள்ள போலியான கணக்குகளில், மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் அதிகமாகப் பதியப்படுகின்றன. பயோ-மெட்ரிக் முறையில் மொபைல் இணைப்புகள் அந்நாட்டில் தரப்படுகின்றன. எனவே, ஃபேஸ்புக்கில் புதிதாகக் கணக்குகளைத் தொடங்க மொபைல் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். மேலும், அந்நாட்டு குற்றப்புலனாய்வுத் துறைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறும் பாகிஸ்தான் அரசு ஃபேஸ்புக் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close