Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்ரோ மைய அதிகாரிகள் சஸ்பெண்ட்

 

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 3 பேர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், இந்த மையத்தில் லஞ்சப் புகாருக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் இயக்குனராக செயல்பட்ட ஜெசி ஃபுளோரா, வளாகத்தின் பொது மேலாளரான ஜேசம்மாள், பொறியாளரான செபாஸ்டின் ஆகியோர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close