Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டில் வேலை செய்வதும் ஒரு பணிதான்

வேலைக்கு போகாத பெண்கள் எல்லோரும் 'என்ன பண்றீங்கன்னு' கேட்டால் உடனே சொல்வது 'சும்மாதான் இருக்கேன்' அதெப்படி பெண்கள் சும்மா இருக்க முடியும்? காலையில் எழுந்து காபி போடுவதில் துவங்கி இரவில் அடுப்படியை ஒழுங்குபடுத்துவது வரை பெண்களுக்குதான் எத்தனை வேலை. இந்தியாவில் மட்டும்தான் வீட்டில் இருக்கும் பெண்கள் பெரிய மதிப்பு இல்லாமல் ஏதோ வெட்டியாக இருப்பதைப்போல மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைக்கு கூட வீட்டின் ஆண்களை நம்பி இருக்க வேண்டியும் உள்ளது. அதிலும் கிராமத்துப் பெண்களின் நிலைமை மோசம். வெனிசுலா நாட்டில், வீட்டில் உழைக்கும் பெண்களுக்கு அது ஒரு பணி என்றே அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு நல்ல தொகையை சம்பளமாக அளிக்கின்றது அந்த நாட்டு அரசாங்கம்.

வேலை

இது மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவும் என்ற விவாதங்கள் எழுந்து வருகின்றது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் அநேகமாக பணியாற்றுபவராகவே இருக்கிறார்கள். கிழக்காசிய நாடுகளில்தான் கணிசமான பெண்கள் வீட்டில் உழைக்கும் சம்பளமில்லாத ஊழியர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக, இந்திய பெண்களில் பலர் குடும்பத்துக்காகவே உழைத்து உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் உழைப்பு சம்பளத்தை எதிர்பார்க்கக் கூடியதுதான் என்கிற உண்மையை அறியாமல் தானிருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் உழைப்பு ஒரு அங்கீகாரத்தைக்கூட பெறாமல் இருக்கிறது.  

வீட்டில் உழைக்கும் பெண்களுக்கு நியாயமாக வயதான காலத்தில் ஓய்வூதியம் கூட வழங்க வேண்டும் என்ற குரல் கேரளத்தில் உழைக்கும் பெண்களுக்கான அமைப்புகளில் எழும்பத் தொடங்கி உள்ளது. கேரளாவில் தேசிய இல்லத்தரசிகள் சங்கம் என்ற ஒன்றை 2011-ம் ஆண்டு ஆரம்பித்தனர். இந்த அமைப்பை சட்டரீதியாக  தொழிற்சங்கமாக பதிவு செய்ய அரசை அணுகியபோது வீட்டு வேலை செய்யும் பெண்களை தொழிலாளர்களாக கணக்கிலெடுக்க முடியாது என்றது. இது அப்போது பெரும் கண்டனக் குரலாக எழுந்தது. இப்போது மீண்டும் அந்த குரல் எழும்பி உள்ளது. பார்ப்போம் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப்போகிறது என்று. அதற்கு முன்பாக பெண்களே நீங்களே உங்களை தாழ்வாக எண்ணிக்கொள்ள வேண்டாம். வீட்டில் இருப்பது ஒன்றும் சும்மா இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement