Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தரமற்ற விதையால் தக்காளி விவசாயிகள் நஷ்டம்... அதிகாரிகள் நடவடிக்கை!

விளைச்சல் குறைவால் தமிழகத்தில் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட சமையலுக்குத் தேவைப்படும் முக்கியமான தக்காளியை அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைவானதால் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தற்போது தருவிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபக்கமென்றால், தமிழகத்தில் தக்காளி பயிர் செய்த விவசாயிகள் தரமற்ற விதைகளால், மிகவும்  நஷ்டமடைந்துள்ள தகவலும் தற்போது வந்துகொண்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை வட்டாரத்தில் இந்த முறை தக்காளி விவசாயம் செய்தவர்கள் அதிகமான அளவில் நஷ்டமடைந்ததை ஆய்வு செய்த வேளாண்மைத் துறையைச் சேர்ந்த விதை ஆய்வாளர்கள்,  இப்பகுதியிலுள்ள விதை விற்பனை நிலையங்களில் சோதனை செய்தார்கள்.  இங்கே விற்பனை செய்யப்பட்ட பிகேஎம்-1 ரக தக்காளி விதையின் முளைப்புத்திறன் 35 சதவிகிதம் மட்டுமே இருந்துள்ளது. அதனால், அந்த விதை விற்பனையாளர் மீது விவசாயிகளை ஏமாற்றிய குற்றத்துக்காக வழக்கு பதியப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் தெலுங்கானா ரக என்.எல்.ஆர். 34449, கே.ஜி.எல். 1798, பி.பி.டி. 5204 ஆகிய ரக தக்காளி விதைகளில் முளைப்புத்திறன் மிகவும் குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தரம் குறைவான விதைகளை விற்ற விற்பனையாளர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல்  மாவட்டங்களில் தக்காளி விதை விற்பனை நிலையங்களில் சோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறையினர் கூறினார்கள். அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டும் விதைகள் வாங்க வேண்டுமென்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

விதையே செத்துப்போனதாக இருந்தால் விளைச்சல் எப்படி வரும்...? விவசாயிகளுக்கு எல்லாப் பக்கமும் வேதனையை கொடுக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement