Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரண்பேடியா? மத்திய அரசா? பொய் சொல்வது யார்? – காங்கிரஸ் பாய்ச்சல்!

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க. நிர்வாகிகள் மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது, மத்திய அரசு. இது, மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கடும் கண்டங்களைத் தெரிவித்தன. மத்திய அரசு நியமித்த அந்த மூன்று எம்எல்ஏ-க்களுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரகசியப் பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனால், ‘புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர், பா.ஜ.க-வின் ஏஜென்ட் போல செயல்பட்டுவருகிறார்’ என்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் கிரண்பேடி.

தொடர்ந்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த அந்த  மூன்று பேரையும் எம்எல்ஏ-க்களாக நியமிக்க, கிரண்பேடிதான் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். புதுச்சேரி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அவர், மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையோடு காங்கிரஸ், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, கடந்த 8-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரண்பேடி, நியமன எம்எல்ஏ-க்களைத்  தான் பரிந்துரைசெய்யவில்லை என்றும் அது உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவு என்றும் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், கோரிமேடு ஜிப்மர் நிறுவன நாள் மற்றும் தொலைதூர மருத்துவ இணைப்பு தொடர்பான துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய இணை அமைச்சர்  பாக்கன் சிங் குலாஸ்தேவிடம், நியமன எம்எல்ஏ-க்கள் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கு நியமன எம்எல்ஏ-க்களை நியமிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. இதை யாரும் மறுத்துக் கூறவேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற பல பிரச்னைகள் டெல்லியில் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகமும் துணைநிலை ஆளுநரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். துணைநிலை ஆளுநரின் பரிந்துரைப்படிதான் எம்எல்ஏ-க்கள் நியமனம் நடந்தது” என்றார்.

நியமன எம்எல்ஏ-க்களைத் தான் பரிந்துரைக்கவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறிவந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பதில், பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயத்திடம் இதுகுறித்து கேட்டபோது, “துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நான் பரிந்துரை செய்யவில்லை என்று சொல்கிறார். ஆனால் மத்திய அமைச்சரோ,துணைநிலை ஆளுநர் பரிந்துரையில்தான் செய்யப்பட்டது என்று சொல்கிறார். இதில் எது உண்மை என்று மக்களுக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். மத்திய அரசு பொய் சொல்கிறதா அல்லது கிரண்பேடி பொய் சொல்கிறாரா? எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றதோ, அங்கெல்லாம் தங்கள் ஆளுநர்கள் மூலமாக ஆட்சிசெய்ய நினைக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement