வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (14/07/2017)

கடைசி தொடர்பு:12:43 (14/07/2017)

ஜிஎஸ்டியைச் சொல்லி லாரி டிரைவர்களை ஏமாற்றிய டெல்லி போலீஸ்!

ஜிஎஸ்டி வரி செலுத்தியிருக்கிறீர்களா என்று கேட்டு, டெல்லியில் ரோந்து போலீஸார் லாரி டிரைவர்களிடமிருந்து பணம் கையூட்டாக வாங்கியிருக்கின்றனர். லஞ்சம் வாங்கிய ஐந்து போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, எல்லோரும் சற்று பீதியில்தான் இருக்கவேண்டியிருக்கிறது. எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி கேட்பார்கள் என்று இதுவரை தெளிவாகாததால், என்ன பொருள் வாங்கினாலும் ஏன் விலை ஏறிவிட்டது என்று கேட்டால், ஜிஎஸ்டி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் சிலர். 

இப்படி டெல்லியில் லாரி டிரைவர்களிடம் எடுத்துச்செல்லும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று கேட்டுப் பயமுறுத்தி, அவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்றிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்காக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஜிஎஸ்டி வரியில் உள்ள முக்கிய அம்சமே, தடையில்லாமல் நாடு முழுக்க பொருள்கள் விரைவாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். பொருள்களை  வாங்கும்போதும், விற்கும்போதுமே ஜிஎஸ்டி வரிக்குள் வந்துவிடும்படிதான் ஜிஎஸ்டி வரி திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக எந்த இடத்திலும் போலீஸார் ஜிஎஸ்டி வரிகுறித்து கேட்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. ஆனால், ஜிஎஸ்டி வரியைச் சொல்லி கையூட்டு வாங்குவது, லாரி டிரைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க